வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவான நிலையில் தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வங்கக்கடலில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருகிறது. தற்போது உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஆனது.
அதை தொடர்ந்து இது புயலாக மாறும் என கணித்த இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த புயலுக்கு டாணா என பெயர் வைத்தது. இந்நிலையில் தற்போது மத்திய கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் டாணா புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த டாணா புயல் அக்டோபர் 25ம் தேதி அதிகாலையில் ஒடிசாவின் பூரி - சாகர் தீவுகளுக்கு இடையே தீவிர புயலாக மாறி கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்டோபர் 24 மற்றும் 25ம் தேதிகளில் ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களுக்கு அதீத கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K