வங்க கடலில் உருவான டானா புயல் இன்று அதிகாலை ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே கரையை கடந்த நிலையில், பெரும் பொருள் சேதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த புயல் காரணமாக ஒருவர் பலியாகியுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மேற்குவங்கத்தின் தெற்கு பகுதி மாவட்டங்களில் சுமார் 3 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டதாகவும், புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் சென்றடைவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் முதல்வர் மம்தா பானர்ஜி குறிப்பிட்டார்.
இருப்பினும், இயற்கை பேரிடரில் ஒருவர் மட்டும் உயிரிழந்ததாகவும், அவர் தனது வீட்டில் கேபிள் தொடர்பான வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது துரதிர்ஷ்டவசமாக மரணம் அடைந்தார் என்றும் முதல்வர் தெரிவித்தார். மேலும், இறந்தவரின் குடும்பத்திற்கு மாநில அரசு உதவ தயாராக இருக்கிறது என்றும் அவர் கூறினார்.