டெல்லியின் மூன்று மாநகராட்சிப் பகுதிகளிலும் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 34,750 இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்த நிலையில் தற்போது இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. நாடு முழுவதும் வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,37,989 ஆக உள்ளது.
கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவியதால் கடந்த மே மாதத்தில் மட்டும் 24 ஆயிரம் இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மே மாதத்தில் 5,475 சான்றிதழ்கள் மட்டும் வழங்கப்பட்டிருக்கின்றன. தெற்கு டெல்லியில் அதிகபட்சமாக 10,209 இறப்புச் சான்றிதழ்கள் கடந்த மே மாதத்தில் மட்டும் வழங்கப்பட்டிருக்கின்றன.
இதற்கு அடுத்தபடியாக வடக்கு டெல்லியில் 9,663 சான்றிதழ்களும், கிழக்கு டெல்லியில் 4,128 இறப்புச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டிருக்கிறது.