டெல்லியில் கரும்பூஞ்சை தொற்றுக்கு நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் வீட்டு முன் போராட முயன்ற காங்கிரஸ் பிரமுகர் அனுமதி கிடைக்காததால் தன் வீட்டு முன்னே போராட்டம் நடத்தியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பே இன்னும் கட்டுக்குள் வராத நிலையில் கரும்பூஞ்சை தொற்று பூதாகரமான பிரச்சினையாக மாறி வருகிறது. இந்நிலையில் கரும்பூஞ்சை தொற்றை தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள பலரும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் கரும்பூஞ்சை தொற்று அதிகரித்துள்ளதால் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி டெல்லியை சேர்ந்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான முகேஷ் சர்மா பிரதமர் இல்லத்தின் முன் போராட திட்டமிட்டுள்ளார். ஆனால் பிரதமர் இல்லம் முன்பு போராட அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன், வீட்டிலிருந்து கிளம்பிய அவரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் தனது வீட்டு வாசலின் முன்பே தர்ணாவில் ஈடுபட்டுள்ளார் முகேஷ் சர்மா. இன்னும் ஒரு வாரத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுக்காத பட்சத்தில் பிரதமர் வீட்டின் முன்பே போராடுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.