Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடரும் சிறுமிகள் பலாத்காரம்; போஸ்கோ சட்டத்தை திருத்தம் செய்யும் மத்திய அரசு

Webdunia
வெள்ளி, 20 ஏப்ரல் 2018 (15:02 IST)
12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை விதிக்க வழிவகுக்கும் போஸ்கோ சட்டத்தை திருத்தம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
காஷ்மீர் கத்துவா மற்றும் உபி உன்னவ் ஆகிய பகுதிகளில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
 
மத்திய அமைச்சர் மேனகா காந்தி சிறுமி பலாத்கார வழக்கில் உள்ள குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார். குற்றவாளிகளுக்கு அதிகப்பட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று பொது நல வழக்கு தொடரப்பட்டது. 
 
இதற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு, 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை என்ற வகை செய்யும் சட்டதிருத்தம் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் மேற்கண்ட சட்டத்திருத்தம் நடவடிக்கை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்