சிறுமிகளை கற்பழிக்கும் காம மிருகங்களுக்கு மரண தண்டனை விதிக்க வழிவகை செய்யும் மசோதாவை மத்தியப்பிரதேச அரசு ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்பியுள்ளது.
சிறுமிகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுபோன்ற கொடூரங்கள் தொடராமல் இருக்கவும், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் பலாத்காரங்களை முடிவுக்கு கொண்டு வரவும் மத்தியப்பிரதேச அரசு, சட்டசபையில் சமீபத்தில் ஒரு புதிய மசோதாவை தாக்கல் செய்துள்ளது. சிறுமிகளை கற்பழிக்கும் காம மிருகங்களுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த மசோதாவிற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதையடுத்து இந்த மசோதா ஜனாதிபதியின் கையொப்பத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்தியப்பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். மேலும் சிறுமிகளுக்கு எதிராக பாலியல் தொல்லையில் ஈடுபடும் காம மிருகங்களுக்கு மரண தண்டனை விதிப்பதன் மூலமாக குற்றச்செயல்கள் குறைய வாய்ப்பிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.