பக்தர்கள் தங்கும் விடுதியில் நடமாடும் கரடிகள்:
திருப்பதியில் பக்தர்கள் தங்கும் விடுதிகள் அமைந்துள்ள பகுதியில் கரடிகள் நடமாடும் சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மலைப்பாதையில் சிறுத்தை புலி நடமாட்டம் அதிகம் இருந்ததாக உறுதிசெய்யப்பட்டது
இந்த நிலையில் சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கரடிகள் பக்தர்கள் விடுதிகளில் தங்கும் விடுதிகள் அமைந்துள்ள பகுதியில் இரவு நேரங்களில் சர்வசாதாரணமாக சுற்றித் திரிகின்றன என்பது சிசிடிவி வீடியோ காட்சிகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக திருமலையில் தங்கியுள்ள தேவஸ்தான ஊழியர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
இதேபோல் கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக மக்கள் நடமாட்டம் இல்லாத்ததால் மூணாறில் இருக்கும் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் யானைகள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன என்றும் இதனால் அந்த பகுதியில் வாழும் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது