நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியவர் பிரபல வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ். பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து பல சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பேசினார்.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தது குறித்து அவர், தனது கன்னத்தில் பலமாக அடி விழுந்துள்ளதாகக் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது :
கடந்த 6 மாதங்களாக பெங்களூர் முழுவதும் சென்று மக்களைச் சந்தித்தேன். அவர்களுடைய பிரச்சனைகளை கேட்டு அறிந்தேன்.
அப்போது போலியான தேசப்பக்தியையும், வெறுப்பையும் வளர்த்த அரசியல் தலைவர்களை எதிர்த்தேன்,ஆனாலும் கூட பாஜகவிற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தனர். இருந்தாலும் மக்களின் முடிவை ஏற்றுக்கொள்கிறேன். முக்கியமாக எனது கொள்கைகள் நிறுவேற வேண்டி தொடர்ந்து உழைப்பேன்.நான் நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டதால் மக்களிடம் நெருக்கமாக இல்லை என்று தெரிவித்தனர். எனவே விரையில் தனியாக கட்சி தொடங்கவுள்ளேன். கட்சி துவங்க பணம் வேண்டும் என்பதால் நான் தொடர்ந்து படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.