அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால், அவர்களுக்கு சர்க்கரை அளவு 300ஐ தாண்டி விட்டதாகவும் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதாகவும் ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு சர்க்கரை நோயாளி என்றும் அவருக்கு சர்க்கரை அளவு அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது
இன்சுலின் மறுக்கப்படுவதாகவும் அவருடைய சர்க்கரை அளவு 300 ஐ தாண்டிய நிலையில் சர்க்கரையை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் திகார் சிறை நிர்வாகம் எடுக்கவில்லை என்றும், ஆங்கிலேயர் ஆட்சியில் கூட இப்படிப்பட்ட கொடுமைகள் நடக்கவில்லை என்றும் ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டி உள்ளது
இந்த நிலையில் பாஜக தரப்பில் இருந்து இதுகுறித்து கூறிய போது சர்க்கரை அளவு அதிகரிக்க வேண்டும் என்பதற்காக அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுமென்றே இனிப்புகளை அதிகம் சாப்பிட்டார் என்றும் சர்க்கரை நோயை காரணம் காட்டி அவர் ஜாமீன் பெறலாம் என்று எண்ணிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்து வருகின்றனர்.