நாடாளுமன்றத் தேர்தலின் போது எனது பிரச்சாரத்தை தடுக்கவே கைது நடவடிக்கை எடுக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை கைது செய்ய அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படும் நிலையில் பாஜக என்னை கைது செய்ய விரும்புவது நேர்மையை கைது செய்ய விரும்புவதற்கு சமம் என்றும் எனது மிகப்பெரிய சொத்து நேர்மை தான் என்றும் அதை அவர்கள் கெடுக்க விரும்புகிறார்கள் என்றும் தெரிவித்தார்.
எனக்கு அனுப்பப்பட்ட சம்மன்கள் சட்டவிரோதமானவை என எனது வழக்கறிஞர்கள் கூறியதால் தான் நான் ஆஜராக வில்லை என்றும் என்னை விசாரிப்பது பாஜகவின் நோக்கம் அல்ல நாடாளுமன்ற தேர்தலுக்கு என்னை பிரசாரம் செய்ய விடாமல் விசாரணை என்ற பெயரில் என்னை அழைத்து கைது செய்ய நினைக்கின்றனர் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
மதுபானம் கொள்கையை தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை மூன்று முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகாத நிலையில் இன்று அவர் அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.