டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா இன்று காலை தனது இல்லத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் தாக்கப்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை நடந்த 'ஜன்சுன்வாய்' கூட்டத்தின்போது, ஒரு புகார்தாரர் போல் காட்டிகொண்ட சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் முதலமைச்சரை அருகே சென்று அவரை தாக்கியுள்ளார். முதலமைச்சரின் பாதுகாப்பு படையினர் உடனடியாக அந்த நபரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
தாக்குதலுக்குள்ளான முதலமைச்சர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக, டெல்லி காவல்துறை உயரதிகாரிகள் முதலமைச்சரின் இல்லத்துக்கு சென்று விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், அந்த நபர் சில ஆவணங்களுடன் வந்து முதலமைச்சரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென அவரை தாக்கியதாக தெரிவித்தனர்.
இந்த தாக்குதலுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.