Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆக்ஸிஜன் இல்லைனா டெல்லியை காப்பாத்த முடியாது??! – உச்சநீதிமன்றத்தில் டெல்லி அரசு கோரிக்கை

Webdunia
சனி, 24 ஏப்ரல் 2021 (11:56 IST)
டெல்லியில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் ஆக்ஸிஜன் கிடைப்பதை உறுதி படுத்த கோரி டெல்லி அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் பல மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. டெல்லியில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு உள்ள நிலையில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் மத்திய அரசை கேட்டுக் கொண்டு வருகிறார்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள ஜெய்பூர் கோல்டன் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு காரணமாக 20 பேர் உயிரிழந்து விட்டதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து உச்சநீதிமன்றத்தை நாடியுள்ள டெல்லி அரசு “டெல்லி மருத்துவமனைகளுக்கு தங்கு தடையின்றி ஆக்ஸிஜன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், 480 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் கிடைக்காத பட்சத்தில் டெல்லி மிகப்பெரும் சீரழிவை சந்திக்கும்” என்றும் கவலை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொழிலதிபர் மனைவியிடம் ரூ.10 கோடி பறித்த சென்னை நபர்கள்.. அதிர்ச்சி தகவல்..!

முதல்வர் பங்கேற்ற விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு: அன்புமணி கண்டனம்..!

சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு நாளை கனமழை வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

டிரம்ப் வெற்றி எதிரொலி: இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி..!

உங்கள் தாத்தா வேலைவெட்டி இல்லாமல் இருந்தாரா? உதயநிதிக்கு தமிழிசை பதிலடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments