செல்போனில் மோசடி அழைப்புகள் வந்தால் உடனே எச்சரிக்கை செய்யும் வகையில் டெல்லி காவல்துறை ட்ரூ காலர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
சமீபகாலமாக செல்போனில் மோசடி தொலைபேசி அழைப்புகள் வருகின்றது என்பது ஓடிபி உள்பட ஒரு சில விவரங்களை வாடிக்கையாளர்களிடம் ஏமாற்றி கேட்டு பண மோசடி செய்யப்பட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் சைபர் கிரைம்களை தடுக்க ட்ரூ காலர் செயலி நிறுவனத்துடன் டெல்லி காவல்துறை ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி இனி ட்ரூ காலர் செயலியை வைத்திருக்கும் செல்போனில் மோசடி அழைப்புகள் வந்தால் உடனே எச்சரிக்கை அறிவிப்பு வரும் என்பது குறிப்பிடத்தக்கது
அதன் மூலம் தனக்கு வரும் அழைப்பு மோசடி என்பதை வாடிக்கையாளர்கள் புரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.