தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.
இந்தியாவில் கொரோனா தாக்கமே இன்னும் குறையாத நிலையில் மற்ற வைரஸ்கள், காய்ச்சல்கள் ஏற்பட்டு வருவது மக்களிடையே மேலும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. மேலும் வட மாநிலங்கள் சிலவற்றில் டெங்கு வைரஸ் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில் 11 மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருவதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது. அதன்படி ஜம்மு - காஷ்மீரில் 1000 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஜம்மு மாவட்டத்தில் அதிகபட்சமாக 659 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளார்.