அழுத குழந்தையை சமாளிக்க முடியாமல் திணறும் தாய்!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் தங்கள் உயிரையும் பணயம் வைத்து பணி செய்து கொண்டிருப்பவர்களில் டாக்டர்கள் இன்றியமையாதவர்களாக கருதப்படுகிறார்கள். குறிப்பாக டாக்டர்கள் தங்கள் குடும்பத்தை மறந்து, சொந்த பந்தங்களை மறந்து, 24 மணி நேரமும் மருத்துவமனை கதி என்று பணி புரிந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் தனது வீட்டிற்கு 15 நாட்களாக செல்லவில்லை என்றும் இதன் காரணமாக அவருடைய ஒன்றரை வயது குழந்தை தினமும் அப்பாவை பார்க்க வேண்டும் என்று அழுது கொண்டு இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
இதுகுறித்து அந்த குழந்தையின் தாயார் கூறியபோது ’எனது ஒன்றரை வயது மகன் அப்பா எங்கே என்று கேட்டு அழுகும் போது என்னால் அவனை சமாதானப்படுத்தவே முடியவில்லை. அதன் பிறகு என்னுடைய மாமனார் தான் என்னுடைய கணவருடன் வீடியோ காலில் பேசி குழந்தையிடம் பேச வைத்தார். அதன் பின்னரே ஓரளவுக்கு எனது மகன் சமாதானம் ஆனான்’ என்று கூறியுள்ளார்
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணி செய்து கொண்டிருக்கும் அந்த டாக்டர் தொடர்ச்சியாக இரண்டு ஷிப்டுகள் பணிபுரிந்து வருவதாகவும் அதனால் அவரால் கடந்த 15 நாட்களாக வீட்டிற்கு வர முடியாத நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. டாக்டர்களின் இந்த மகத்தான சேவைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது