கேரளாவின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் நேற்று விமர்சையாக கொண்டாடப்பட்டது. கேரளாவில் ஓணத்திருவிழா கடந்த 10 நாட்களாக நடைபெற்றது.
கடந்த மாதம் 25 ஆம் தேதி துவங்கி நேற்று 4 ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு கேரளாவில் இப்பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
திருவோண பண்டிகையின் போது கேரளாவில் மது விற்பனை அமோகமாக நடைபெறும். ஓணத்திருவிழாவை ஒட்டிய 10 நாட்களுக்கு கேரளாவில் வழக்கத்தை விட கூடுதலாக மதுபானங்கள் விற்பனை ஆகும்.
அதன்படி, இந்த 10 நாட்களில் மட்டும் கேரளாவில் ரூ.440.60 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆனது. இது கடந்த ஆண்டை விட ரூ.29.46 கோடி அதிகம். இதில் பீர் மட்டும் ரூ.71.17 கோடிக்கு விற்பனை ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.