Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

ரத்தாகிறது இ-பாஸ்: பயணங்களுக்கு கட்டுபாடு இல்லை என உள்துறை நோட்டிஸ்!

ரத்தாகிறது இ-பாஸ்: பயணங்களுக்கு கட்டுபாடு இல்லை என உள்துறை நோட்டிஸ்!
, சனி, 22 ஆகஸ்ட் 2020 (15:52 IST)
மாநிலங்களுக்கு இடையே, மாநிலத்துக்குள் பயணிக்க எந்த கட்டுப்பாடும் விதிக்கக் கூடாது என உள்துறை செயலர் கடிதம். 
 
தமிழகத்தில் கொரோனா காரணமாக மாவட்டம் விட்டு மாவட்டம் பயணிக்க இ-பாஸ் வாங்கும் நடைமுறை அமலுக்கு வந்தது. ஆனால் இ-பாஸ் பெறுவதில் பல சிக்கல்கள் இருப்பதாகவும், முறைகேடுகள் நடப்பதாகவும் மக்கள் மற்றும் எதிர்கட்சியினர் குற்றம் சாட்டிய நிலையில் விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ் என்ற நடைமுறையை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. 
 
அனைவருக்கும் இ பாஸ் வழங்கப்படுவதால் இனி அந்த நடைமுறை எதற்கு என கேள்வி எழுந்துள்ளது. இதற்கு முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்பவர்களை இ-பாஸ் முறை இருந்தால் தானே கண்டறிய முடியும். இ-பாஸ் முறையால் தான் கொரோனா யாருக்கு எல்லாம் இருக்கிறது என கண்டறிய முடிகிறது. இ-பாஸ் முறையால் தான் கொரோனா பரவல் இந்த அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது என கூறினார். 
 
ஆனால் தற்போது மாநிலங்களுக்கு இடையே, மாநிலத்துக்குள் பயணிக்க எந்த கட்டுப்பாடும் விதிக்கக் கூடாது. பயணத்துக்கென தனியாக அனுமதி, ஒப்புதல், இ-பாஸ் போன்றவை கூடாது என அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் உள்துறை செயலர் கடிதம் அனுப்பியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கொசுக்கள் 75 கோடி தயார் நிலையில் - ஏன்? எதற்காக?