பிளாஸ்டிக்குக்கு மாற்றாக ஈட்டபிள் கப்களை உருவாக்கியுள்ளது ஜினோம்லேப் நிறுவனம்.
தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை ஒருசில நாட்கள் கடுமையாக கடைபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு கொஞ்சம் கொஞ்சமாக தொடங்கிவிட்டது. இந்நிலையில் இந்தியா முழுவதும் இதைக் கொண்டுவர மத்திய அரசு முனைப்புகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் பிளாஸ்டிக்கு மாற்றாக ஈட்டபிள் கப்களை உருவாக்கியுள்ளது ஜினோம்லேப் நிறுவனம். இந்த கப்கள் முழுக்க முழ்க்க தானியங்களால் செய்யப்பட்டது என்றும் செயற்கை வண்ணங்களோ பொருட்களோ கலக்காமல் தயாரிக்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சுமார் 40 நிமிடம் வரை இது நமத்துபோகாமல் இருக்கும் வகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சூடான மற்றும் குளிர்ச்சியான பானங்கள் இரண்டையும் இதில் பயன்படுத்தலாம். தற்போது இந்த வகைக் கப்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. விரைவில் இதைத் தயாரிக இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க இருப்பதாக அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.