டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏற்கனவே ஐந்து முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில் அவர் ஆஜராகாத நிலையில் தற்போது ஆறாவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.
மதுபான வழக்கில் முறைகேடு செய்ததாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ள நிலையில் இது குறித்து விசாரணை செய்ய அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.
ஏற்கனவே இதே வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணி சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜரானால் அவரும் கைது செய்யப்படுவார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் வழக்கறிஞர்களின் ஆலோசனையின் படி அமலாக்க துறையின் சம்மனுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.
இந்த நிலையில் ஆறாவது முறையாக தற்போது அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இந்த முறை அவர் ஆஜர் ஆவாரா அல்லது மீண்டும் ஆஜராகாமல் இருப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதனால் டெல்லி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.