Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உபி அமைச்சர் கார் மோதி 8 வயது சிறுவன் பரிதாப பலி!

Advertiesment
யோகி ஆதித்யநாத் | ஓம் பிரகாஷ் ராஜ்பர் | உத்தரப் பிரதேசம் | அமைச்சர் கார் | UP minister’s cavalcade | Om Prakash Rajbhar | Hit by car | Eight-year-old boy dies
, ஞாயிறு, 29 அக்டோபர் 2017 (18:49 IST)
உத்தரப் பிரதேச மாநில அமைச்சர் அமைச்சர் ஓம்பிகாஷ் ராஜ்பர் என்பவரின் கார் மோதி 8 வயது சிறுவன் பலியான சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



 
 
உத்தரப் பிரதேச மாநிலத்தில் கலனல்கஞ்ச் - பரஸ்பூர் நெடுஞ்சாலையில் நேற்றிரவு விளையாடி கொண்டிருந்த சிவகோஸ்வாமி என்ற 8 வயது சிறுவன் மீது வேகமாக வந்த கார் மோதியது. இந்த விபத்தில் சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாப உயிரிழந்தான். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்தபோது சிறுவன் மீது மோதிய கார் அம்மாநில மூத்த அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பரின் பாதுகாப்பிற்காக சென்ற கார் என்பது உறுதியாகியது
 
மேலும் சிறுவன் மீது மோதிய கார் நிற்காமல் சென்று விட்டதாகவும், இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து பேட்டி அளித்த அமைச்சர் ராஜ்பர், விபத்து நடந்த போது தான் வேறொரு இடத்தில் இருந்ததாகவும் இந்த விபத்திற்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் விளக்கமளித்தார்.
 
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், பலியான சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.,

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீதிபதி ஆகிறார் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா