தேர்தல் நேரத்தை அதிகாலையிலேயே தொடங்க சொல்லி தொடரப்பட்ட மனுவில் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.
இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் நான்கு கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மீதமுள்ள 3 கட்ட தேர்தல் மே 21 ஆம் தேதி வரை நடக்க இருக்கின்றன. இந்நிலையில் ரமலான் மாதம் மே 5 ஆம் தேதி தொடங்க இருப்பதால் இஸ்லாமியர்கள் அதிகமுள்ள பகுதிகளில் தேர்தல் நடந்தால் நோன்புகள் பாதிக்கப்படும் என சர்ச்சை எழுந்தது. அதையடுத்து நோன்பு நேரத்தில் இஸ்லாமியர்கள் வெளியில் செல்ல மாட்டார்கள் என்பதால் தேர்தல் நேரத்தை அதிகாலை 5 மணிமுதலே அரம்பிக்க வேண்டுமென நிஜாமுதின் பாஷா என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த மனுவை ஏற்று விசாரித்த உச்ச்நீதிமன்றம் இது குறித்து பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. இது சம்மந்தமாகத் தேர்தல் ஆணையம் இன்று பதில் அளித்துள்ளது. அதில் ‘ தேர்தலை காலையிலேயே தொடங்கினால் முகவர்கள் இன்னும் சீக்கிரமே வாக்குச்சாவடிக்கு வரவேண்டும். அதனால் அது சாத்தியமில்லாதது’ எனெத் தெரிவித்துள்ளது.