தினகரனுக்கு ஆதரவாக இருப்பதாக கூறி அதிமுக எம்எல்ஏக்கள் மூவருக்கு நோட்டீஸ் அனுப்பியதற்கு இடைக்கால தடை வித்துள்ளது உச்சநீதிமன்றம்.
தினகரனுக்கு ஆதரவாக இருப்பதாக கூறி அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூவர் மீது அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் 3 எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார்.
இந்நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்ட மூன்று எம்.எல்.ஏக்களில் ஒருவரான கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு மீண்டும் அதிமுக அணியிலேயே இணைவதுக்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
ஆனால் அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் கலைச்செல்வன் ஆகிய இருவரும் சபாநாயகர் தங்கள் மேல் நடவடிக்கை எடுப்பதற்குத் தடை விதிக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இரு தரப்பு விவாதத்தை கேட்ட நீதிபதி அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் மூன்று பேருக்கு சபாநாயகர் தன்பால் அனுப்பிய நோட்டீஸுக்கு தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பாக சபாநாயகர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.