Webdunia - Bharat's app for daily news and videos

Install App

75 வயதிற்கு மேற்பட்டோர் வருமான வரி செலுத்த தேவையில்லை: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Webdunia
திங்கள், 1 பிப்ரவரி 2021 (12:56 IST)
75 வயதிற்கு மேற்பட்டோர் வருமான வரி செலுத்த தேவையில்லை
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் அதிரடியாக வெளியாகி கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
குறிப்பாக தனிநபர் வருமான வரியில் மாற்றம் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நிமிடங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் வங்கி வட்டி மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றை மட்டுமே நம்பியுள்ள 75 வயதிற்கு மேற்பட்டோர் வருமானவரி செலுத்த தேவையில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் அறிவித்துள்ளார் 
 
இன்று தாக்கல் செய்ய பட்ஜெட்டில் அவர் இதுகுறித்து கூறியபோது ’வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான இரட்டை வரியை ரத்து செய்ய புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்றும் 75 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை என்றும் அறிவித்துள்ளார்
 
மேலும் நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவில் 6.48 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் குறைந்த விலையில் வீடு வாங்குவதற்கான வட்டி வரிச்சலுகை மேலும் ஓராண்டு நீட்டிக்கப்படும் என்றும் இந்த சலுகையின்படி வீட்டு கடன் வட்டிக்கு ரூபாய் 1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு பெற முடியும் என்றும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments