Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், புதிய விதிமுறைகளுக்கு ஒப்புதல் !

ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், புதிய விதிமுறைகளுக்கு ஒப்புதல் !
, சனி, 29 மே 2021 (19:45 IST)
மத்திய அரசின் டிஜிட்டல் மீடியா புதிய விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்க கூகுள், வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.

கடந்த பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி  இந்தியாவில் மத்திய அரசு சமூக வலைதளங்களான ஃபேஸ்புக்,டிவிட்டர்,வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட நிருவனங்களுக்கான புதிய விதிகளை அறிமுகம் செய்தது.  இது 3 மாதம் காலத்திற்கு காலக்கெடு நிர்ணயித்த நிலையில் முடிந்துள்ளது.

அதேசமயம் மத்திய அரசின் புதிய விதிமுறைகள், மக்களின் பொதுக்கருத்துச் சுதந்திரத்திற்கு அபாயம் உள்ளதாக டுவிட்டர் நிறுவனம் குற்றம்சாட்டியது. இதற்கு மத்திய அரசு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துக் கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில்,  மத்திய அரசின் புதிய விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்க சமூக வலைதளங்களான ஃபேஸ்புக்,டிவிட்டர்,வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட நிருவனங்கள் சம்ம்தம் தெரிவித்துள்ளது. அதேபோல் விதிகளின் உள்ள படி புகார்களை விசாரிக்க தனி அதிகாரியையும் நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

ஆனால் டுவிட்டர் இந்தியா நிறுவனம் மட்டும் இந்தப்பு திய விதிமுறைகளுக்கு ஒப்புதல் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், சர்ச்சைக்குரிய கருத்துகளை நீக்குதல், ஒவ்வொரு சமூக வலைதளமும் தனி அடிகாரிகளை அதுவும் இந்தியர்களாக நியமிக்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு