மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிராக பல லட்சம் விவசாயிகள் தில்லியில் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அரசு 2 வது நாளாக விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. அப்போது மத்திய அரசு அவர்களுக்கு சாப்பிட உணவு கொடுத்தனர்.
ஆனால அந்த உணவைச் சாப்பிட மறுத்துவிட்டு தங்கள் கொண்டு வந்த உணவை மட்டுமே சாப்பிட்டனர்.
இதுகுறித்து விவசாய சங்கத் தலைவர் கூறுகையில், மத்திய அரசு சார்பில் எங்களுக்கு அளிக்கப்பட்ட உணு மற்றும் தேநீரை நாங்கள் வாங்கவில்லை எங்கள் உணவை நாங்களே அங்குக் கொண்டுசென்று அருந்தினோம், எனத் தெரிவித்துள்ளார்.