செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியிட்ட கொரோனா காலப் பொது ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் நவம்பர் 30 ஆம் தேதிவரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 4 கோடிக்கு அதிகமாக உள்ளது.
இந்தியாவில் 80 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஐந்தாவது கட்டமாக சில தளர்வுகளுடன் ஊரடங்கு உள்ளது.
இந்நிலையில், கொரோனா தொற்று ஆரம்ப காலத்தை விட பரவல் மற்றும் இறப்பு விகிதம் குறையத் தொடங்கியுள்ளது. அதேசமயம் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் தற்போது மத்திய அரசு, செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியிட்ட கொரோனா நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் கொரொனா காலப் பொது ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் நவம்பர் 30 ஆம் தேதிவரை நீட்டிக்கப்படுவதாகமத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், மாநிலங்களுக்கு இடையே இனிமேல் போக்குவரத்து இபாஸ் தேவையில்லை எனவும், 60% இருக்கைகளுடன் சினிமா தியேட்டர்களை இயக்கலாம் எனவும், உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளதுபோல் சர்வதேச விமான போக்குவரத்துக்கும் அனுமதி அளிப்பதாக அறிவித்துள்ளது.