Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலில் சீட் கொடுத்தவுடன் கட்சி மாறிய பாஜக பெண் பிரபலம்.. சிவசேனா கட்சியில் இணைந்தார்..!

Mahendran
செவ்வாய், 29 அக்டோபர் 2024 (13:14 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரதிய ஜனதாவின் செய்தி தொடர்பாளராக இருந்த பெண் பிரபலம் ஒருவர், சிவசேனா கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் அந்த கட்சியில் இணைந்தார். 
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் நவம்பர் 20 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதனால், பாஜகவின் செய்தி தொடர்பாளர் ஷைனா என்பவரை மும்பையின் மும்பாதேவி வேட்பாளராக சிவசேனா அறிவித்தது. இதையடுத்து சில மணி நேரங்களில், அவர் ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில் சிவசேனா கட்சியில் இணைந்தார். 
 
இதுகுறித்து ஷைனா கூறியதாவது: "நான் என் வாழ்நாள் முழுவதும் தெற்கு மும்பையில் வசித்து வருகிறேன். இங்குள்ள மக்களின் அன்றாட சவால்களை உணர முடிகிறது. மும்பை மக்களுக்காக நான் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற விரும்புகிறேன். நான் ஒரு எம்எல்ஏவாக மட்டும் இருக்க விரும்பவில்லை; மக்களின் குரலாக இருக்க விரும்புகிறேன்.   என் குடிமக்களுக்கு நான் எப்போதும் பொறுப்பான நபராக இருப்பேன்’ என்று கூறினார்."
 
பாஜக கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு தேர்தல் டிக்கெட்டுக்காக கட்சி மாறிய இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டான்லி மருத்துவமனையில் இன்னொரு மருத்துவர் மீது தாக்குதல்: அதிர்ச்சி தகவல்..!

சொர்க்கத்தில் இருந்து இந்திரா காந்தி வந்தாலும் காஷ்மீருக்கு 370வது பிரிவு கிடைக்காது: அமித்ஷா

2 மாவட்டங்களில் இன்று முதல் டிஜிட்டல் முறையில் மது விற்பனை! ரசீதும் கிடைக்கும்..!

சென்னை உள்பட 19 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம்..!

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments