இந்தியாவிலேயே முதல்முறையாக ஆந்திராவில் சாமானியர்களும் பயணம் செய்யும் வகையில் கடல்வழி விமான சேவை தொடங்கப்பட இருப்பதை அடுத்து, இதன் வெள்ளோட்ட நிகழ்ச்சி நேற்று விஜயவாடாவில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். மேலும் இவர்கள் இருவரும் வெள்ளோட்ட நிகழ்ச்சியில் கடல் விமானத்தில் ஸ்ரீசைலம் வரை பயணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடல் வழி விமான பயணத்தில் ஒவ்வொரு சாமானியரும் பயணம் செய்யலாம் என்றும், இந்த விமானத்தில் 14 பேர் பயணம் செய்யலாம் என்றும், ஆந்திராவில் உள்ள நான்கு தடங்களில் இந்த முக்கியமான போக்குவரத்தை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் இந்த சேவை ஆந்திராவில் தொடங்க இருப்பதாகவும், இதன் மூலம் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை ஆந்திராவில் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
வருங்காலத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும், அவற்றில் ஒன்றுதான் கடல் வழி விமான போக்குவரத்து என்றும் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறினார்.