மகாரஷ்டிராவில் மீண்டும் கனமான மழை பெய்து வருவதால், வெள்ளம் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பல நாட்களாக தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. இதனால் மும்பையில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. முக்கியமாக மும்பையின் சயான், கோரேகோன், கல்யாண் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீரால் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
இந்நிலையில் மத்திய ரயில் பாதையில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் புறநகர் ரயில்களில் சில ரத்து செய்யப்பட்டுள்ளன. சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்து வருவதால் பேருந்துகள் முடங்கியுள்ளன.
மேலும், இந்த கனமழையால் கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.