Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியை அடுத்து முதல்வரை எதிர்த்து போட்டியிடும் முன்னாள் ராணுவ வீரர்

Webdunia
திங்கள், 30 செப்டம்பர் 2019 (20:05 IST)
தேஜ் பகதூர் என்ற ராணுவ வீரர் கடந்த 2017 ஆம் ஆண்டு ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார். இதனால் அவர் ராணுவ விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டார் 
 
 
இந்த நிலையில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட போது, அந்த தொகுதியில் சமாஜ்வாடி கட்சியின் சார்பில் தேஜ்பகதூர் போட்டியிட மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது மனு ஒரு சில காரணங்களுக்காக தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து அவர் பதிவு செய்துள்ள வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
 
இந்நிலையில் அரியானா மாநில தேர்தல் வரும் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அம்மாநிலத்தில் வேட்புமனு தாக்கல் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஹரியானா மாநில முதல்வர் மனோகர் கட்டார் போட்டியிடும் கர்னூல் என்ற தொகுதியில் அவரை எதிர்த்து முன்னாள் ராணுவ வீரர் தேஜ்பகதூர் போட்டியிடப் போவதாகவும், அவரை ஜனநாயக் ஜனதா கட்சி முதல்வரை எதிர்த்து நிறுத்த உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. தேஜ்பகதூரின் இந்த மனுவாவது ஏற்றுக்கொள்ளப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments