கோவில் இருக்கும் இடத்தில் மசூதியை கட்டிய நிலையில் அந்த மசூதிகளிலிருந்து முஸ்லிம்கள் வெளியேறாவிட்டால் எத்தனை பேர்கள் கொல்லப்படுவார்கள் என்று எனக்கு தெரியாது என்று முன்னாள் கர்நாடகா அமைச்சர் ஈஸ்வரப்பா சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருப்பதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மதுரா, வாரணாசி ஆகிய இடங்களில் உள்ள மசூதியை காலி செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது
இந்த வழக்கு குறித்து கர்நாடக முன்னாள் அமைச்சர் கே எஸ் ஈஸ்வரப்பா தெரிவிக்கையில் இந்து கோயில் நிலத்தில் கட்டப்பட்டிருக்கும் மசூதிகளில் இருந்து முஸ்லிம்கள் அவர்களாக வெளியேற வேண்டும். இல்லை என்றால் எத்தனை பேர் கொல்லப்படுவார்கள் என்று எங்களுக்கு தெரியாது என்று பேசி உள்ளார்.
மேலும் நீதிமன்ற தீர்ப்பு வந்ததும் உடனடியாக கோயில் கட்டும் பணியை நாங்கள் தொடங்குவோம் என்றும் அதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் மசூதி கட்டப்பட்டுள்ள பகுதியில் இருக்கும் முஸ்லிம்கள் தானாக வெளியேறிக்கொள்வது அவர்களுக்கு நல்லது என்றும் பேசி உள்ளார். அவருடைய பேச்சுக்கு அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்