Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலாவை சந்திக்க சென்ற வளர்மதி, கோகுல இந்திரா, சி.ஆர்.சரஸ்வதிக்கு நேர்ந்த சோகம்

Webdunia
செவ்வாய், 21 பிப்ரவரி 2017 (21:31 IST)
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ராஹர சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.



சிறையில் இருக்கும் சசிகலாவை அவ்வப்போது அவரது கட்சியினர் சென்று பார்த்து வருகின்றனர். நேற்று அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஆகியோர் சென்று பார்த்தனர். விரைவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவை சந்திக்க பெங்களூர் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சசிகலாவைச் சந்திக்க முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா மற்றும் அதிமுக செய்தித்தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் சிறை வளாகத்திற்கு சென்றனர். ஆனால் சிறை நிர்வாகம் அவர்களை அனுமதிக்காததால் அவர்கள் 4 மணி நேரம் சிறைக்கு வெளியே காத்திருந்தனர்.

சசிகலாவை சந்திக்க தினந்தோறும் பார்வையாளர்களை அனுமதிக்க முடியாது என்று சிறை நிர்வாகம் உறுதியாக கூறிவிட்டதால் சோகத்துடன் அவர்கள் திரும்பி வந்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடற்கரையில் பக்தர்கள் தங்க கூடாது: திருச்செந்தூர் காவல்துறை தடை..!

ஊட்டிக்கு வரப்போகிறது ஹைட்ரஜன் ரயில்.. ஒரு ரயில் உருவாக்க இத்தனை கோடியா?

23 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை கொட்டப்போகுதி கனமழை: வானிலை எச்சரிக்கை..!

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் இளைஞர் மரணம்: மருத்துவமனை விளக்கம்

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments