வட மாநிலங்களில் விடாது பெய்யும் அடைமழையால் கங்கை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கங்கை செல்லும் பாதைகளில் உள்ள ஊர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் ஒரு பகுதியில் மழையே இல்லாமல் வறண்டு கிடக்க மற்றொரு பகுதி மழை வெள்ளத்தால் மூழ்கி கிடக்கிறது. சமீபத்தில் மும்பையில் ஏற்பட்ட பலத்த மழையால் மக்கள் ஊரை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது அதீத மழையால் கங்கையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கங்கைநதியின் தொடக்கமான ரிஷிகேஷ் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. சுற்றுலா பயணிகள் ரிஷிகேஷ் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ரிஷிகேஷில் உள்ள பிரம்மாண்டமான சிவன் சிலை வெள்ள நீரில் மூழ்குமளவு 338 மீட்டர் உயரத்திற்கு வெள்ளம் புகுந்துள்ளது. அதை தொடர்ந்து உத்திரபிரதேசத்தின் பல பகுதிகளிலும், வாரணாசியிலும் கோவில்களுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் புனித யாத்திரை சென்ற பலர் தரிசனம் பெறாமலேயே திரும்பியுள்ளனர்.
மேலும் இன்னும் இரண்டு நாட்கள் தொடர்ந்து மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அரசாங்கள் அறிவுறுத்தியுள்ளது.