இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்து வரும் நிலையில் தற்போது டெபாசிட் தொகையும் உயர்த்தப்பட்ட்டுள்ளது.
இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து சிலிண்டர் விலையும் நாளுக்கு நாள் விலை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் தற்போது டெபாசிட் தொகைகளையும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி அறிவித்துள்ளன.
அதன்படி, 14.2 கிலோ எடை கொண்ட ஒரு சிலிண்டருக்கான டெபாசிட் தொகை ரூ.1450 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.750 உயர்ந்து ரூ.2200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு சிலிண்டர்களுக்கான இணைப்பை பெறுவதற்கான டெபாசிட் ரூ.4,400 ஆக உயர்ந்துள்ளது.
5 கிலோ சிறிய சமையல் எரிவாயு சிலிண்டருக்கான டெபாசிட் தொகை ரூ.1,150 ஆக உயர்ந்துள்ளது.