இந்தூர் மாநிலத்தில் தெருவில் நாய் அசுத்தம் செய்தால் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி முடிவுசெய்துள்ளது.
நாட்டில் தூய்மையான நகரங்கள் என 434 நகரங்களின் புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது. இந்த வருடம் மிக தூய்மையான நகரங்கள் பட்டியலில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் முதலிடம் பிடித்துள்ளது. இந்தூரில் தூய்மையை காக்கும் வகையில் சிறப்பு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சாலை மற்றும் தெருக்களில் அசுத்தம் செய்யும் நாய்களின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை மாநகராட்சி தெரிவித்துள்ளது. விரைவில் இந்த உத்தரவு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று பிகார் மாநிலத்தில் உள்ள ஜாமல்பூர் நகரில் தெருக்களில் அசுத்தம் செய்யும் நாய்களின் உரிமையாளர்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.