நாளை மறுநாள் அதாவது அக்டோபர் 13ஆம் தேதி நாடு முழுவதும் பெட்ரோல் பங்குகள் வேலைநிறுத்தம் செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த போராட்டம் திடீரென சற்று முன்னர் வாபஸ் பெறப்பட்டது
தினசரி விலை நிர்ணய முறைக்கு எதிர்ப்பு, பெட்ரோலியப் பொருள்களை ஜி.எஸ்.டி வரிவிதிப்புக் கீழ் கொண்டுவர வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 13-ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த போராட்டம் தற்போது வாபஸ் பெறப்பட்டதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெற்றதற்கான காரணத்தை பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.