Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆந்திரா: ராட்டினம் கவிழ்ந்து சிறுமி பலி

Advertiesment
ராட்டினம் விபத்து
, திங்கள், 28 மே 2018 (12:08 IST)
ஆந்திரா மாநிலத்தில் நடந்த பொருட்காட்சியில் ராட்டினம் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 10 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
 
ஆந்திர மாநிலம் அனந்தப்பூரில் உள்ள ஜூனியர் கல்லூரி மைதானத்தில் பொருட்காட்சி நடத்தப்பட்டது. இதில் அமைக்கப்பட்டிருந்த ராட்சத ராட்டினம் ஒன்றில் ஏற்பட்ட பழுதினை கவனிக்காமல் இயக்கியதால் அந்த ராட்டினம் விபத்துக்குள்ளானது.
 
இந்த விபத்தில் 10 வயது சிறுமி பலியாகியுள்ளார். மேலும், படுகாயமடைந்த 6 பேர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த ராட்டினத்தின் டிராலியின் இணைப்பு விலகியதை கவனித்து அதனை இயக்கியவரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டததாகவும், ஆனால் அவர் குடிபோதையில் இதனை கவனிக்காமல் விட்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாக அங்குள்ளவர்கள் குற்றம்சாட்டினர்.
ராட்டினம் விபத்து
 
இதையடுத்து, ராட்டினத்தை இயக்கிய அந்த நபரை அங்கிருந்த பொதுமக்கள் சரமாரியாக தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வங்கியில் 6 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளை