Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

வினேஷ் போகத்துக்கு பாரத ரத்னா அல்லது எம்பி பதவி வழங்குக..! திரிணாமுல் காங்கிரஸ் வலியுறுத்தல்.!!

Vinesh Pogath

Senthil Velan

, வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (15:35 IST)
பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப் பிரிவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்திய வீராங்கனை வினேஷ் போகத்திற்கு பாரத ரத்னா விருது அல்லது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை மத்திய அரசு வழங்க வேண்டும் என மேற்கு வங்கத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி அபிஷேக் பானர்ஜி வலியுறுத்தி உள்ளார்.

பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்ட வினேஷ் போகத், இறுதிப் போட்டிக்கு முன்னதாக அதிக எடையுடன் இருந்ததாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். போட்டிக்கு முன்பாக அவர் எடை போடும் போது குறிப்பிட்ட அளவை காட்டிலும் 100 கிராம் மட்டுமே வினேஷ் போகத் எடை அதிகமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
 
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மேற்கு வங்கத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி அபிஷேக் பானர்ஜி, மத்திய அரசும், எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதன்படி வினேஷ் போகத்திற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இல்லையென்றால் வினேஷ் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யபட வேண்டுமென அவர் வலியுறுத்தி உள்ளார்.

 
பாரீஸ் ஒலிம்பிக்கில் அவரது விளையாட்டை யாராலும் மறுக்க முடியாது என்றும், பல்வேறு சவால்களை எதிர்கொண்டு உள்ள வினேஷ் போகத்திற்கு அதற்கான அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என்றும் அபிஷேக் பானர்ஜி வலியுறுத்தி உள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வயநாடு பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து கேரளாவை இளைஞர் தத்ரூபமாக மினியேச்சர் உருவம் உருவாக்கியுள்ளார்