நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் கோவா 100% என்னும் இலக்கை அடைந்துள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு முதலாக கொரோனா பாதிப்புகள் இந்தியாவில் பரவ தொடங்கியது. இதுவரை இந்தியாவில் மூன்று அலை கொரோனா பரவியுள்ள நிலையில் கோடி கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த கோவாக்சின், கோவிஷீல்டு உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
தடுப்பூசி திட்டம் தொடங்கி ஒரு ஆண்டிற்குள் 100 கோடி டோஸ் தடுப்பூசி என்ற இலக்கை இந்தியா தாண்டியது. இந்நிலையில் தற்போது மாநில அளவிலான தடுப்பூசி நிலவரத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்துவதில் 100 சதவீதம் இலக்கை அடைந்துள்ளது கோவா. இந்தியாவிலேயே 100 சதவீத இலக்கை அடைந்த முதல் மாநிலம் என்ற சாதனையை கோவா படைத்துள்ளது.