இரண்டாம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் ஏப்ரல் 20 க்கு பிறகு என்னென்ன தொழில்களை மேற்கொள்ளலாம் என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, கூரியர் நிறுவனங்கள், ஆன்லைன் வணிக நிறுவனங்கள் செயல்படலாம். ஆனால் அத்தியாவசிய பொருட்களை மட்டுமே டெலிவரி செய்ய வேண்டும்.
கேபிள் மற்றும் DTH நிறுவனங்கள் இயங்க அனுமதி
ஐ.டி நிறுவனங்கள் மற்றும் ஐடி தொடர்பான சேவை நிறுவனங்கள் 50% ஊழியர்களுடன் இயங்கலாம்.
கல்வி நிலையங்கள், பயிற்சி மையங்கள், திரையரங்குகளுக்கு தடை மே 3 வரை தொடரும்
கனரக வாகன பழுதுபார்க்கும் கடைகள் செயல்பட அனுமதி
கிராமப்பகுதிகள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள ஆலைகள் சமூக இடைவெளியை பின்பற்றி இயங்க அனுமதி.
விவசாயம் மற்றும் விவசாய விளைபொருட்கள் சார்ந்த பணிகளுக்கு அனுமதி
எலக்ட்ரிக்கல், பிளம்பிங் மற்றும் வெல்டிங் உள்ளிட்ட பணிகளை செய்ய அனுமதி