நாளை நாடு முழுவதும் ஜிஎஸ்டி சீர்திருத்தம் அமலாக உள்ள நிலையில் இன்று மாலை நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி உரையாட உள்ளார்.
இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமலில் உள்ள நிலையில், அதில் பல சீர்திருத்தங்கள் செய்து வரிகளை குறைத்து சமீபத்தில் மத்திய நிதியமைச்சகம் ஜிஎஸ்டி சீர்திருத்தத்தை அறிவித்தது. இந்த ஜிஎஸ்டி சீர்திருத்தம் நாளை முதல் அமலுக்கு வர உள்ள நிலையில் வாட்டர் பாட்டில் தொடங்கி ஆடம்பர கார்கள் வரை வரி குறைக்கப்பட்ட புதிய விலை குறித்த அறிவிப்புகள் வெளியாகி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
நாளை ஜிஎஸ்டி சீர்திருத்தம் அமலாக உள்ள நிலையில் இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்ற உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மக்களுக்கு தீபாவளி பரிசு தருவதாக பிரதமர் மோடி ஏற்கனவே கூறியிருந்த நிலையில்தான் ஜிஎஸ்டி சீர்திருத்தம் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை உரையாற்றும் பிரதமர் மோடி ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் நாட்டு மக்கள் அடைய உள்ள நன்மைகள், உள்நாட்டு உற்பத்தி பெருக்கம் குறித்தும், அமெரிக்க வரிவிதிப்பை எதிர்கொள்ளும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K