தினமும் 100 கொரோனா நோயாளிகளுக்கு உணவு தரும் பெண்
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் நோயாளிகளுக்கு தினமும் உணவு அளித்து வரும் பெண் குறித்த தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நினா என்பவர் இதற்கென ஒரு வாட்ஸ் அப்பை ஆரம்பித்துள்ளார் அதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் இணைந்து கொள்ளலாம் என்றும் அவர்களுக்கு தேவையான உணவு இலவசமாக கிடைக்கும் என்றும் அறிவித்துள்ளார்
இதனை அவர் பிரசாதம் என்றே குறிப்பிடுகிறார். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் அவர்களுக்கு சமையல் செய்ய முடியாத நிலை ஏற்படும் அப்படிப்பட்டவர்களுக்கு உணவு செய்வதே தனது லட்சியம் என்றும் இதற்காகவே தான் ஒரு ஆறு பெண்களை இணைத்துக் கொண்டதாகவும் தினமும் 100 பேர்களுக்கு சமையல் செய்து இலவசமாக அவர்களுக்கு வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்
மேலும் இதற்காகவே இரண்டு பேர்களை டெலிவரி செய்யவும் அவர் வேலைக்கு ஆள் எடுத்து உள்ளார் என்பதும் அவர்களுக்கும் தனது கையில் இருந்து அவர் சம்பளம் கொடுத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவருடைய சேவையை பாராட்டி பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்