Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தங்க நகை அடமானம் வெச்சிருக்கீங்களா? விதிமுறைகளை மாற்றியது ரிசர்வ் வங்கி! - உடனே இதை தெரிஞ்சிக்கோங்க!

Advertiesment
Gold Rules by RBI

Prasanth Karthick

, புதன், 21 மே 2025 (10:50 IST)

தங்க நகைகளை வங்கி, தனியார் கடன் நிறுவனங்களில் அடமானம் வைக்க புதிய கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி அமல்படுத்தியுள்ளது.

 

ஏற்கனவே தங்க நகைக்கட விதிமுறைகளில் அடமானம் வைக்கும் தங்கத்தை ஒரு ஆண்டுக்குள் மீட்டு, மீண்டும் அடகு வைக்க வேண்டும் என அமல்படுத்தப்பட்டுள்ள நடைமுறை மக்களை சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் தங்க நகைகளை அடகு வாங்கும் வங்கிகள், தனியார் நிறுவனங்களில் செயல்பாடுகள் ஒன்றாக இருப்பதற்கு ஏற்றவாறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

 
  • அதன்படி, அடமானம் பெறும் தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் தொகையை மட்டுமே கடனாக வழங்க வேண்டும். (தற்போது 90 சதவீதம் கடனாக தரப்படுகிறது)
  •  
  • தங்க நகையை அடமானம் வைக்க வருபவர்கள் அது தங்களுடைய நகைதான் என்பதற்கான ஆதாரத்தை சமர்பிக்க வேண்டும்
  •  
  • தங்கத்தின் மீது கடன் வழங்கும் வங்கிகள் அந்த தங்கத்தின் தரத்தை உறுதிப்படுத்த ஒரு தரச்சான்றிதழை வழங்க வேண்டும்
  •  
  • வெள்ளி நகைகள், பொருட்களுக்கும் கடனுதவி வழங்க அனுமதிக்கப்படுகிறது.
  •  
  • ஒரு நபர் அதிகபட்சமாக ஒரு கிலோ தங்க நகைகள், 50 கிராம் தங்க நாணயங்கள் வரை அடகு வைக்கலாம்.
  •  
  • தங்கத்திற்கு கடன் வழங்கும்போது 22 காரட் தங்கத்தின் அடிப்படையிலேயே விலையை கணக்கிட வேண்டும்
  •  
  • தங்க நகையை வைத்து கடன் வாங்குபவருக்கு அவரது ஒப்பந்தத்திலேயே தங்கத்தின் விவரம், மதிப்பு, ஏலம் விடுதல் முறை போன்ற தகவல்களை சேர்க்க வேண்டும்
  •  
  • தங்க நகைக்கான கடனை கடனாளி திரும்ப செலுத்தி விட்டால், பணம் செலுத்தி 7 நாட்களுக்குள் தங்கத்தை திருப்பி தர வேண்டும். தவறினால் ஒரு நாளைக்கு ரூ.5 ஆயிரம் கூடுதலாக வங்கிகள், கடன் நிறுவனங்கள் செலுத்த வேண்டியிருக்கும்
 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்னை துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கம் இருந்தது: சுப்ரீம் கோர்ட் நீதிபதி மீது ஓய்வு நாளில் நீதிபதி குற்றச்சாட்டு