ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் தனது கைது நடவடிக்கையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று அவசர வழக்காக விசாரணைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஜார்கண்ட் மாநில புதிய முதலமைச்சராக இன்று சம்பாய் சோரனை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். சம்பாய் சோரன் நேற்று காலை ஆட்சியமைக்க உரிமை கோரிய நிலையில், ஜார்கண்ட் ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த நிலையில் ஹேமந்த் சோரன் கைதுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில் ஹேமந்த் சோரன் தனது கைது நடவடிக்கை எதிர்த்து உற்சவ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, சுந்தரேஷ் மற்றும் பேலா திரிவேதி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு இந்த மனுவை இன்று விசாரிக்கிறது