Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

அதிவேக தகவல் தொடர்பு சேவை செயற்கைகோள் : ஜிசாட் 7 விண்ணில் ஏவப்பட்டது

அதிவேக தகவல் தொடர்பு சேவை செயற்கைகோள் : ஜிசாட் 7 விண்ணில் ஏவப்பட்டது
, புதன், 19 டிசம்பர் 2018 (16:18 IST)
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில்  இருந்து இன்று மாலை 4:10க்கு ஜிசாட் 7 ஏ என்ற செயற்கைகோள் அதிவேக தகவல் தொடர்புக்காகவும், இணையதள சேவைக்காகவும் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் தகவல் தொடர்பு சேவை கிடைக்கவேண்டி ஜிசாட் 7 ஏ என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். இதன் எடை 2, 250 கிலோ என்று கூறப்படுகிறது.
 
நம்நாட்டில் தயார் செய்யப்பட்ட செயற்கைக்கோள்களில் இது 35 வது என்ற சிறப்பை பெற்றுள்ளது. இதன் ஆயுட்காலம் 8 ஆண்டுகள் ஆகும். இந்திய எல்லைப்பகுதியில் தகவல் தொடர்பை மேம்படுத்துவதற்காகவே இது விண்ணில் நிறுத்தப்படவுள்ளது.குறிப்பாக இஸ்ரோவின் ஸ்டாண்டர்டு1.2 k அடிப்படையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
 
மேலும் ஜிஎஸ்எல்வியின்  13வது ராக்கெட்டான எஃப் 11 ராக்கெட்டுடன் இது செலுத்தப்பட்டுள்ளது.இதற்காக கவுண்டவுன் நேற்று தொடங்கிய நிலையில் ஜிசாட் 7 ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து தற்போது வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
 
இது நம் இந்தியாவின் சாதனையாகவும் பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செம பிசி வைகோ -இரண்டு வாரத்திற்கு ஆஃப்லைன்