Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாட்ஸ் ஆப்-ல் ஊடுருவும் PEGASUS ஸ்பைவேர் !!

Webdunia
திங்கள், 19 ஜூலை 2021 (12:41 IST)
வாட்ஸ் ஆப் எண்ணிற்கு மிஸ்ட்டு கால் கொடுப்பதன் மூலம் செல்போனில் பெகாசஸ் ஸ்பைவேர் முழுமையாக ஊடுருவும் என தகவல். 

 
இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ என்ற நிறுவனத்தின் PEGASUS சாப்ட்வேர் மூலம் வேவு பார்ப்பதற்கு 50,000-த்திற்கும் மேற்பட்ட செல்போன்கள் இருந்துள்ளது. இதில் பெரும்பாலான எண்கள் இந்தியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மெக்சிகோ, பஹ்ரைன், ஹங்கேரி, மொரோக்கோ, ருவாண்டா, அஜர்பைஜான், கஜகஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்தவையாம்.  
 
இந்தியாவைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோரது செல்போன் எண்களும் உள்ளன. இதில் 2 மத்திய அமைச்சர்கள், 3 எதிர்க்கட்சித் தலைவர்கள், 40க்கும் அதிகமான பத்திரிகையாளர்கள், நீதிபதி ஆகியோரது எண்களும் அடக்கம் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஆனால் இதனை மத்திய அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது. தனிநபர் ரகசியம் என்பது அடிப்படை உரிமை என்பதால் அது காக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக மத்திய அரசு இது குறித்து விளக்கம் அளித்துள்ளது. 
 
PEGASUS சாப்ட்வேர் இமெயில் அல்லது குறுஞ்செய்தி வழியாக கண்காணிக்கப்பட வேண்டிய நபரின் மொபைலுக்கு அனுப்பப்படும். இந்த குறிப்பிட்ட லிங்கை ஒருவர் அழுத்தியதும் அந்த மொபைல் முழுவதுமாக கண்காணிப்பாளர்கள் கட்டுப்பாட்டிற்குள் சென்று விடும். மேலும், வாட்ஸ் ஆப் எண்ணிற்கு மிஸ்ட்டு கால் கொடுப்பதன் மூலமே அந்த செல்போனில் பெகாசஸ் ஸ்பைவேர் முழுமையாக ஊடுருவி விட முடியும். இவ்வாறு தான் செல்போனில் ஊடுருவி வேவு பார்த்துள்ளனர்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments