Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கணவன் துடிக்க துடிக்கக் கொலை! வீடியோ காலில் பார்த்து ரசித்த கொடூர மனைவி!

Advertiesment
Andhra Pradesh

Prasanth Karthick

, ஞாயிறு, 6 ஏப்ரல் 2025 (13:55 IST)

கர்நாடகாவில் கணவனை கொலை செய்ய காதலனை ஏவி விட்ட மனைவி, அதை வீடியோ காலில் பார்த்து ரசித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

 

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தை சேர்ந்தவர் சிவனகவுடா பட்டீல் (43). இவருக்கு ஷைலா (38) என மனைவி உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக ஷைலாவுக்கும், ருத்ரப்பா என்ற நபருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறிய நிலையில் இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.

 

இந்த விஷயம் ஷைலாவின் கணவர் சிவனகவுடாவுக்கு தெரிய வந்த நிலையில் அவர்கள் இருவரையும் கண்டித்துள்ளார். சிவனகவுடா இருந்தால் தங்களை இன்பமாக இருக்க விட மாட்டார் என முடிவு செய்த ஷைலா, ருத்ரப்பா சேர்ந்து சிவனகவுடாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளனர்.

 

ஒருநாள் ஷைலா தன்னை தனது தாயார் வீட்டில் விடுமாறு சிவனகவுடாவிடம் சொல்ல, சிவனகவுடா சென்று அவரை விட்டுவிட்டு திரும்பும்போது அவரை மறித்த ருத்ரப்பா, அவரை அடித்தே கொன்றுள்ளார். அதை வீடியோ கால் எடுத்து ஷைலாவுக்கு காட்ட அவரும் அதை பார்த்து ரசித்துள்ளார். 

 

பின்னர் சிவனகவுடா இறந்தது குறித்து தெரிய வந்தபின் ஒன்றும் தெரியாதது போல அங்கு சென்று கதறி அழுதுள்ளார். ஆனால் அவரது செயல்பாடுகளில் சந்தேகம் அடைந்த போலீஸார் அவரது செல்போனை ஆய்வு செய்ததில் அவர் மாட்டிக் கொண்டுள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ளனர்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விமானத்திலிருந்து ராமர் பாலத்தை தரிசித்த பிரதமர் மோடி! - வீடியோ வைரல்!