Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”பழைய பர்னிச்சர் குடுத்து அசிங்கப்படுத்துறீங்களா?” திருமணத்தை நிறுத்திய மணமகன்!

Webdunia
செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (11:15 IST)
தெலுங்கானாவில் திருமண சீர்வரிசையாக பழைய பர்னிச்சர்களை கொடுத்ததாக மணமகன் திடீரென திருமணத்தை நிறுத்திய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா பல்வேறு வகைகளில் வளர்ச்சி அடைந்து விட்டாலும் வரதட்சணை ரீதியான கொடுமைகள் ஆங்காங்கே தொடர்ந்து இருக்கத்தான் செய்கின்றன. தெலுங்கானாவில் வரதட்சணை தொடர்பாக திருமணத்தன்றே மணமகன் திருமணத்தை நிறுத்திய சம்பவம் நடந்துள்ளது.

தெலுங்கானாவின் ஐதராபாத் பகுதியில் பஸ் டிரைவராக வேலை பார்த்து வரும் இவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணமகனின் வீட்டார் பெண் வீட்டாரிடம் கட்டில், மெத்தை, பீரோ, டிவி, பைக் என பல சீர்வரிசைகளை வரதட்சணையாக கேட்டுள்ளனர்.

ALSO READ: குஜராத் உள்பட 8 மாநிலங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை.. என்ன காரணம்?

பெண் வீட்டாரும் அவர்கள் கேட்ட வரதட்சணை அனைத்தையும் கொடுத்துள்ளனர். திருமணத்தன்று காலை மணமகள் வீட்டார் அனைவரும் திருமண மண்டபம் வந்துவிட்ட நிலையில் மணமகன் வீட்டார் யாரும் வராமல் இருந்துள்ளனர். இதனால் மணமகன் வீட்டாரை அழைக்க அவர்களது வீட்டிற்கு பெண் வீட்டார் சென்றுள்ளனர்.

ஆனால் அவர்களோ வரதட்சணையாக கொடுக்கப்பட்ட பர்னிச்சர் பொருட்களில் பல ஏற்கனவே உபயோகப்படுத்திய பழைய பொருட்கள் போல இருப்பதாக கூறி திருமணத்தை நிறுத்துவதாக கூறியுள்ளனர். இதனால் தங்கள் மகள் வாழ்க்கை வீணாகும் என பெண் வீட்டார் கெஞ்சியும் அவர்கள் இறங்குவதாக இல்லை. இதனால் திருமணம் நின்று போன நிலையில் ஆத்திரமடைந்த பெண் வீட்டார் காவல் நிலையத்தில் மணமகன் மீது வரதட்சணை கொடுமை புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பர்ஸ் திருடு போகவே இல்லை: பாஜக விளக்கம்..!

இந்த ஆண்டு மிகச்சிறந்த மழை காத்திருக்கிறது: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

மதுரை காவல்நிலையம் அருகே துண்டிக்கப்பட்ட தலை.. உடல் எங்கே? அதிர்ச்சி சம்பவம்..!

இன்று மாலை மற்றும் இரவில் 19 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..!

பிரியங்காவை பார்க்க வந்த கூட்டம், ஓட்டு போட வரவில்லையா? வயநாட்டில் வாக்கு சதவீதம் குறைவு..!

அடுத்த கட்டுரையில்