நான் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளன் என்றும் ஆர்எஸ்எஸ் அழைத்தால் மீண்டும் அந்த இயக்கத்துக்கு சென்று விடுவேன் என்றும் ஓய்வு பெறும் நாளில் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
நேற்று பணியில் இருந்து ஓய்வு பெற்ற கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சித்தரஞ்சன் தாஸ் பேசியபோது நான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவன் என்பதை தைரியமாக சொல்வேன், அதில் எந்தவித தவறும் இல்லை, ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன், நீதிபதி ஆனதால் ஆர் எஸ் எஸ் அமைப்பின் நடவடிக்கைகளில் பங்கேற்காமல் விலகி இருந்தேன்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் செல்வாக்கை எந்த இடத்திலும் நான் பயன்படுத்தியது இல்லை, எனது பணியில் சித்தாந்த அடிப்படையில் யாரிடமும் வேறுபாடு காட்டியதும் இல்லை, ஆனால் அதே நேரத்தில் தற்போது நான் ஓய்வு பெற்று விட்டதால் ஆர்எஸ்எஸ் என்னை மீண்டும் அழைத்தால் அந்த அமைப்புக்கு செல்ல நான் தயாராக இருக்கிறேன் என்று பேசி உள்ளார்.
ஓய்வு பெறும் நாளில் உயர் நீதிமன்ற நீதிபதி சித்தரஞ்சன் தாஸ் அவர்களின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது