இந்தியாவில் மக்களவை தேர்தலில் 4 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார்.
இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் இதுவரை 4 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில் அடுத்தக்கட்ட தேர்தலில் உத்தர பிரதேசத்தின் வாரணாசி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்த பிரதமர் மோடி அப்பகுதியில் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் இன்று மகாராஷ்டிராவின் தானேவில் நடந்த தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு பேசிய அவர் “நேற்று காசியில் இருந்தபோது தேர்தல் பிரச்சாரத்தின்போது பல இளைஞர்களை சந்தித்தேன். நாட்டு இளைஞர்களிடம் பல புதிய சிந்தனைகள் இருப்பதை கண்டேன்.
இளைஞர்களை சந்தித்த இந்த நாட்கள் எனக்கு பல நல்ல ஆலோசனைகள் கிடைக்க வழி செய்தது. ஆகவே இளைஞர்களுக்காக 25 நாட்களை ஒதுக்கியுள்ளேன். நாட்டில் உள்ள இளைஞர்கள் தங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை எனக்கு அனுப்ப வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.